மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரிசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தத்தில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் நள்ளிரவில் நடந்த வைகாசி மாத ஊஞ்சல் உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூரில் கூடினர். இதையடுத்து எழிலரசி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அப்போது அம்மன் தாலாட்டு பாடல்களை பூசாரிகள் பாடி அங்காளம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டினர்.
இதைத் தொடர்ந்து ஊஞ்சல் மேடை அருகே நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆனந்தமாக அம்மனை வழிபட்டுச் சென்றனர். இவ்விழா ஏற்பாட்டினை மாவட்ட இணை ஆணையர் திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.