ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்
ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்
Published on

ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மருந்துக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை, வேதாரண்யம், சீர்காழி ஆகிய பகுதிகளில் மருந்து வணிகர்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை செய்வதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மதுரை மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கடைகளை அடைத்து மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை செய்தால் மருந்துகளின் தரம் குறித்து உறுதி செய்ய முடியாது என்றும் காலாவதியான, போலி மருந்துகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆன்லைன் விற்பனை மூலம் தடை செய்யப்பட்ட மருந்துகளை சிறுவர்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவித்தனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அனைத்து மருந்தகங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் மருந்துகள் வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com