ஆர்டிஐ தகவலுக்கு ரூ.10,000 ? - மருத்துவ அலுவலரின் வசூல் பதில்

ஆர்டிஐ தகவலுக்கு ரூ.10,000 ? - மருத்துவ அலுவலரின் வசூல் பதில்
ஆர்டிஐ தகவலுக்கு ரூ.10,000 ? - மருத்துவ அலுவலரின் வசூல் பதில்
Published on

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க வட்டார மருத்துவ அலுவலர் 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தக்கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை சேர்ந்த தாமரைச் செல்வம் என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் சில கேள்விகளை முன்வைத்து விண்ணப்பித்திருந்தார். அதில் சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2011 முதல், நடப்பு ஆண்டு வரை வடபாதிமங்கலம் மற்றும் அரிச்சந்திரபுரத்திற்கு உட்பட்ட பகு‌திகளில் பேறுகால நிதி உதவி பெற்ற பயனாளிகளின் பட்டியலை பார்த்து அதன் நகலை பெற அனுமதி கேட்டிருந்தார். அத்துடன் அவற்றை குறிப்பு எடுத்துக் கொள்ளவும் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அனுமதி கோரியிருந்தார். 

மேலும், வேறு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமாயின் அதை கொடுத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஏப்ரல் 24ஆம் தேதி உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அருண் பதில் அளித்துள்ளார். அதில் பதிவேட்டில் இருக்கும் ஆவணம், கணிப்பொறியில் இருக்கும் தகவல் ஆகியவற்றை அளிக்க காகிதம், மை மற்றும் பிற செலவினங்களுக்காக ‌10 ஆயிரம் ரூபாயை அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். பணம் செலுத்தினால் பயனாளிகளின் முழு விபரம் வழங்க இயலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை தருவதற்காக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தக் கூறிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com