புதுக்கோட்டை: குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதா? கிராமத்தில் மருத்துவ முகாம்!

கந்தர்வகோட்டை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இன்று தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது
Medical Camp
Medical Camppt desk
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், நேற்று அழுக்கு நிறைந்து காணப்பட்டது. இதனால் அந்த குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்தப் பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது.

Medical Camp
மனைவியை மறைத்து சிறுமியைத் திருமணம் செய்த லாரி ஓட்டுநர் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அதன் அடிப்படையில் அந்த தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு அதில் எடுக்கப்பட்ட மாதிரி இன்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Watter Supply
Watter Supplypt desk

இதனிடையே அந்த தெருவில் வசிக்கும் 35 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஒன்றிய அலுவலர்களின் உத்தரவின் அடிப்படையில் இன்று தண்ணீர் வண்டிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில் அந்த கிராமத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீரிரை பருகியதால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்யும் மருத்துவர்கள், யாரேனும் பாதிப்பு உள்ளது என்று சொன்னால் அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com