மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடும், சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித ஒதுக்கீடும் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தஞ்சையை சேர்ந்த சிபிஎஸ்இ பாடப்பிரிவு மாணவர் தார்ணீஷ் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் அறிவிப்பால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு போதிய இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார். ஆகையால், தரவரிசை பட்டியலை வெளியிடவும், கலந்தாய்வை நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் பதில் அளிக்க உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாநில பாடப்பிரிவினருக்கு 85%, சிபிஎஸ்இ பாடப்பிரிவினருக்கு 15% ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குப்பதிவு செய்த தார்ணீஷ் குமார், “அரசின் அறிவிப்பால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு போதிய இடம் கிடைக்காது, தரவரிசை பட்டியலை வெளியிடவும், கலந்தாய்வை நடத்தவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.