``தற்போது வரை சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது”- மேயர் பிரியா தகவல்

``தற்போது வரை சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது”- மேயர் பிரியா தகவல்
``தற்போது வரை சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது”- மேயர் பிரியா தகவல்
Published on

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் வரும் 10 தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், 95 சதவீத பணிகள் தற்போது வரை முடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் மேயர் சிவராஜின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மிண்டு தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் ப்ரியா ராஜன், “மழைநீர் வடிகால்களை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னையை இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையை பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாவது பகுதியை பொறுத்தவரை 35 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக ஏற்பட்டு பாதிக்கப்பு ஏற்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே இருக்கிறது. அதுவும் அக்டோபர் 10ம் தேதிகுள் நிறைவடைந்துவிடும். மேலும் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கும் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம்.

மழை தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் அந்த பகுதியில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்படும். இது தொடர்பாக மின்சார துறை மற்றும் மெட்ரோ துறைக்கும் அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com