மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வயது 145... கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வயது 145... கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!
மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வயது 145... கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!
Published on

பழமை வாய்ந்த மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் 145-வது தொடக்க நாளை முன்னிட்டு ரயில் நிலைய நடைமேடையில் ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னையில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு அப்போதைய தென்னக ரயில்வே, இருப்புப்பாதை அமைத்தது. அவ்வகையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பாதை 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முடிவடைந்து, அப்போதைய தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தால் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் முதன்முதலாக ரயில் வண்டிகள் இயக்கப்பட்டன.

இந்த தடம் அன்றைய காலகட்டத்தில் சென்னையையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் ஒரே முக்கிய ரயில் பாதையாக இருந்ததால் இப்பாதை இன்றளவும் மெயின் லைன் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ரயில் சேவை தொடங்கிய 145-வது ஆண்டை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடையில் மயிலாடுதுறை மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து பயணிகள், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com