மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ஜேசிஐ சங்கத்தினர்

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ஜேசிஐ சங்கத்தினர்

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ஜேசிஐ சங்கத்தினர்
Published on

கொரோனா காலத்தில் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு மயிலாடுதுறை ஜேசிஐ சங்கத்தினர் 50 நாட்களாக மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் பசியில் வாடுவதைத் தடுக்க, ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சேவை சங்கத்தினர் கடந்த 50 நாட்களாக மதிய உணவினை வழங்கி வருகின்றனர். இதற்காக அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் தாங்களே உணவு சமைத்து, அதனை பொட்டலங்களாக கட்டி இருசக்கர வாகனங்களில் எடுத்துச்சென்று பசியால் வாடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும், 'உணவு வேண்டியோர் எடுத்துக்கொள்ளுங்கள்" என்ற பேனருடன் நகரின் மையப்பகுதிகளில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வைத்து தேவைப்படுவோர் எடுத்துச்செல்லவும் வழி ஏற்படுத்தித் தந்துள்ளனர். இன்று 50-வது நாளை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்களுக்கு அவர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கினர். இதில், தலைமை மருத்துவர் வீரசோழன் பங்கேற்று உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com