போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் 15 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.
13வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் 15ஆம் தேதி வேலை நிறுத்தபோராட்டம் அறிவித்திருந்தன. இதையடுத்து தொழிற்ச்சங்கத்தினர், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிற்ச்சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலுவை தொகை வழங்க அரசு ஒதுக்கி உள்ள ரூ.500 கோடி போதாது, அரசு உடனே ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் திட்டமிட்டப்படி 15 ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
தொழிற்ச்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும், போராட்டம் நடத்துவதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது, போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.