திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி நீடிப்பதால் மதிமுக அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிமுக 12 தொகுதிகளை கேட்கும் நிலையில் 6 தொகுதிகளை வழங்குவதாக திமுக உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. இதனால் திமுக - மதிமுக இடையே நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படவில்லை.