திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று அண்ணா அறிவாலத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் தரப்பில் திமுகவிடம் 12 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் திமுக தரப்பில் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.
கடந்த தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை வெறும் 6 இடங்கள் மட்டுமா என்று அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்த பின்பு வழக்கமாக வெளியே வந்து பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவில் நிர்வாகிகள் பேட்டி கொடுக்காமல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.