போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றியது ஏன்? மருது அழகுராஜ் வாக்குமூலம்!

போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றியது ஏன்? மருது அழகுராஜ் வாக்குமூலம்!
போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றியது ஏன்? மருது அழகுராஜ் வாக்குமூலம்!
Published on

சசிகலா தரப்பு தனக்கு ராஜ துரோகம் புரிந்தவர்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரி யர் மருது அழகுராஜ், ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில்  நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் வாக்குமூலம் அளித்தார். அதில், கடந்த 2011ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை போயஸ் கார்டனில் இருந்து துரோகம் செய்ததாக வெளியேற்றிய ஜெயலலிதா, இதில் மாற்றுக்கருத்து இருந்தால், தன்னையும் வெளியே சென்று விடலாம் என்று கூறியதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

அப்போது ஜெயலலிதாவுடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறியதை அடுத்து, நமது எம்.ஜி.ஆர். நிர்வாக இயக்குனர் பொறுப்பை வழங்கி யதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போயஸ் கார்டன் பணிகளை மேற்கொள்வார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுமாறு தனக்கு உத்தரவு பிறப்பித்ததாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற போதும், அவரது வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிற்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறிய அவர், உடன் இருந்தவர்கள் ஜெயலலிதாவை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டை ஆணையத்தில் முன்வைத்துள்ளார். 

மேலும் மருத்துவ சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாமல் தடுத்த சக்தி யார் எனவும் மருது அழகுராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com