மார்கழி மாத பௌர்ணமி: ஸ்ரீ பாண்டுரங்க சமேத ரகுமாயி தாயாருக்கு வெண்ணெய் காப்பு

மார்கழி மாத பௌர்ணமி: ஸ்ரீ பாண்டுரங்க சமேத ரகுமாயி தாயாருக்கு வெண்ணெய் காப்பு
மார்கழி மாத பௌர்ணமி: ஸ்ரீ பாண்டுரங்க சமேத ரகுமாயி தாயாருக்கு வெண்ணெய் காப்பு
Published on

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்க சமேத ரகுமாயி தாயார் ஆலயத்தில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு 120 கிலோ வெண்ணையில் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீ பாண்டுரங்கன் சமேத ரகுமாயி தாயார் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு குருஜி ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ பாண்டுரங்க சாமி மற்றும் ரகுமாயி தாயாருக்கு திருமேனி முழுதும் குளிரக் குளிர 120 கிலோ வெண்ணெயால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆண்டுக்கு ஒரேயொரு முறை நடைபெறும் இந்த வெண்ணைக்காப்பு அலங்காரத்தை காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்து சாமியை வழிபட்டுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com