மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களும், இளைஞர்களும் தங்களை விரட்ட வந்த காவல்துறையினர்’ மீது மணல் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். போராட்டத்திற்கான நோக்கங்கள் நிறைவேறி விட்டதால் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனையடுத்து இளைஞர்களில் ஒரு தரப்பினர் கடலுக்குள் சென்று மிரட்டினர். அப்போது கடற்கரையை நோக்கி வந்த மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கடற்கரை பகுதியில் தங்களை நோக்கி வந்த காவலர்கள் மீது மாணவர்களும், இளைஞர்களும் மணல் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.