சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சாலையோரம் இருந்த மீன்கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன் வியாபாரம் செய்து வந்தனர். அவர்களுக்காக அதே பகுதியில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இங்குள்ள 366 கடைகளை ஒதுக்கும் பணி முடிவடைந்த நிலையில், இன்று முதல் அவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சாலையோரம் இருந்த மீன்கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய மீன் அங்காடியில் கடை வைக்க முறையாக டோக்கன் வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “எனக்கு இன்னும் டோக்கன் வரவில்லை. ஆனால், என் கடையை அகற்றுகிறார்கள். டோக்கன் கொடுங்கள் நான் கடையை எடுத்துவிடுகிறேன் என தெரிவித்தேன். ஒன்றாம் எண் டோக்கன் கொடுத்ததாக சொன்னீர்கள். அதே ஒன்றாம் எண் டோக்கன் வேறு ஒருத்தரிடமும் உள்ளது. நாங்கள் என்ன டோக்கன் வைத்துக்கொண்டா கடைக்கு செல்லாமல் இருக்கின்றோம்” என தெரிவித்தார்.