சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெரினா கடற்கரை.. காரணம் என்ன?

சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட இதர ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை
மெரினா கடற்கரைpt web
Published on

சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட இதர ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பதுகுறித்து காணலாம்...

விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் 6ஆம் தேதி மெரினா கடற்கரையில் வான்சாகச நிகழ்வு நடைபெறவுள்ளது. அதில், ஆளுநர், முதலமைச்சர், விமானப்படை தலைவர், ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். அதற்கான பாதுகாப்பு மற்றும் சாகச ஒத்திகை அங்கே நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையாக மெரினா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை
மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீக்கம் - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சிகர புள்ளிவிவரம்

இதற்கிடையில், விமான அட்டவணையில் மாற்றம் செய்து சென்னை விமானம் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் 8 ஆம் தேதி வரை பல்வேறு இடைவெளிகளில், சென்னை விமான நிலைய வான்தடம் மூடப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை விமான நிலைய வான்தடம் மூடப்படுவதாகவும், அக். 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல்களுக்கு விமான நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை
நாமக்கல்லில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் விவகாரம்: தோண்ட தோண்ட கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள்...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com