வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை தவற விட்ட மாரி செல்வராஜ் - ஜவாஹிருல்லா

வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லாpt desk
Published on

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

வாய்ப்பைத் தவற விட்டுவிட்ட மாரி செல்வராஜ்

நெல்லையில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில் இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துவிட்டு லேட்டரல் என்ட்ரி என்று சொல்லக்கூடிய பக்கவாட்டு அனுமதியின் மூலம் விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்பது விவசாயத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக் கூடிய நிறுவனம். இதில் இட ஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படுவதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Vaazhai movie
Vaazhai moviept desk

சிறந்த இயக்குநரான மாரி செல்வராஜ், வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட் மாநகரத்தில் வாழைத்தார் ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கி சேற்றில் கவிழ்ந்த போது, முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஜாதி, மத வேறுபாடு இன்றி விடிய விடிய போராடி பலரை காப்பாற்றினர். தென் மாவட்டங்களில் தேவையான ஜாதிய நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வாய்ப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் தவற விட்டு விட்டார்.

ஜவாஹிருல்லா
வாழை |வேலைகள்தான் வேறுவேறு.. மாணவர்களின் வலி ஒன்றுதான்.. ’பருக்கை’ நாவலாசிரியர் பகிர்ந்த அனுபவங்கள்!

பாட நூல்களில் அனைத்து மதம் சார்ந்த விஷயங்களையும் சேர்க்க வேண்டும்

மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். பாலியல் வன்முறை கவலைக்குரியதாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசுக்கு மட்டுமின்றி ஆசிரியர், பெற்றோர், ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் பொறுப்பு இருக்கிறது. சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர். பாலியல் குற்ற வழக்குகளை ஒரு மாதத்திற்குள் விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

sexual harres
sexual harresfile
ஜவாஹிருல்லா
தமிழ்புலிகள் Vs நாம் தமிழர் | சீமான் மீது கொலைசதி புகார்.. நடந்தது என்ன? விரிவான பின்னணி

முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது போல, கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களையும் அரசு வலிமையாக எடுக்க வேண்டும். அதுதான் மதச்சார்பற்ற அரசுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பாட நூல்களில் குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேசியிருக்கிறார். பாட நூல்களில் அனைத்து மதம் சார்ந்த விஷயங்களையும் சேர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாசாரம் பரவி இருப்பது கவலைக்குரியது. இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீதான வழக்கை விரைவாக நடத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

ஜவாஹிருல்லா
”நீங்கலாம் மனுஷங்களே இல்ல தெரியுமா..” டெல்லி டி20 போட்டியில் 308 ரன்கள் குவிப்பு.. 3 உலகசாதனை காலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com