சென்னையில் மாரத்தான் போட்டிகள்: 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னையில் மாரத்தான் போட்டிகள்: 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சென்னையில் மாரத்தான் போட்டிகள்: 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Published on

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் 'பிரஷ்ஓர்க்ஸ் சென்னை மாரத்தான்'' என்ற மாரத்தான் போட்டிகள் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 42 கிலோமீட்டர், 32 கிலோமீட்டர், 21 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என்று 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகிறது.

சென்னை மெரினா நேப்பியர் பாலத்தில் இருந்து 42 கிலோமீட்டர் மராத்தான், 32 கிலோமீட்டர் மாரத்தான் போட்டிகள் தொடங்கப்பட்டன. 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நேப்பியர் பாலம், சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், பெருங்குடி, சோழிங்கநல்லூர், வழியாக இ.சி.ஆர். வழியாக எம்.ஜி.எம். வரை சென்று மீண்டும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிக்க வேண்டும்.

32 கிலோமீட்டர் மாரத்தான் நேப்பியர் பாலம், சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், பெருங்குடி, சோழிங்கநல்லூர், வழியாக இ.சி.ஆர். இல் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிக்க வேண்டும்.

 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி பெசன்ட் நகர் பகுதியில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்று ஓடினர்.

21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி பெசன்ட் நகரில் தொடங்கி அடையாறு, மத்திய கைலாஷ், பெருங்குடி, சோழிங்கநல்லூர், வழியாக இ.சி.ஆர். இல் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிக்க வேண்டும்.

இதேபோன்று 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான குறுகிய தூர மாரத்தான் போட்டியாக 10 கிலோமீட்டர் போட்டி மெரினா நேப்பியர் பாலம் பகுதியில் தொடங்குகிறது.

10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி மெரினா நேப்பியர் பாலத்தில் தொடங்கி சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், தரமணி சி.பி.டி. மைதானத்தில் முடிக்க வேண்டும். இந்த மாரத்தான் போட்டிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com