''அறிகுறியே இல்லாமல் பரிசோதனை மூலம் பாதிப்பு உறுதியாகியுள்ளது” - ராதாகிருஷ்ணன்

''அறிகுறியே இல்லாமல் பரிசோதனை மூலம் பாதிப்பு உறுதியாகியுள்ளது” - ராதாகிருஷ்ணன்
''அறிகுறியே இல்லாமல் பரிசோதனை மூலம் பாதிப்பு உறுதியாகியுள்ளது”  - ராதாகிருஷ்ணன்
Published on

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து வந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் மற்றும்‌‌ ஆம்புலன்ஸ் ‌பணியாளர்கள் 4 பேர் என புதிதாக 24 பேருக்கு அரியலூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூருக்கு சென்ற 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பரிசோதனையை அதிகரித்துள்ளதால் பாதிப்பு அதிகமாக தெரிய வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com