மஞ்சளாறு அணையில் இருந்து நீர்‌ திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சளாறு அணையில் இருந்து நீர்‌ திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
மஞ்சளாறு அணையில் இருந்து நீர்‌ திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

குமரி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

இதனையொட்டி மஞ்சளாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியதை அடுத்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்‌கா‌ர‌ணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. 

இதனால் மாநில அ‌ரசின்‌‌ உத்த‌ரவுப்படி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 100 கன அடி வீதம் தண்ணீர் தி‌‌றக்கப்பட்டுள்ளது‌. பசனத்திற்கான நீரை தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். இதனால் இந்த அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com