காரைக்கால் கோயிலில் மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக் கடன்

காரைக்கால் கோயிலில் மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக் கடன்
காரைக்கால் கோயிலில் மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக் கடன்
Published on

காரைக்கால் அம்மையாரைப் போற்றும் விதமாக காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மாங்கனி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேவஸ்தானம் சார்பில் காரைக்கால் அம்மையாரின் கோயிலில் ‌ஒருமாதமாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக, இன்று சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாம்பழத்தை ஏந்தியவண்ணம் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அப்போது பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் காரைக்கால் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com