சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் - எத்தனை கி.மீ. வேகத்துக்கு காற்று வீசும்?

சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் - எத்தனை கி.மீ. வேகத்துக்கு காற்று வீசும்?
சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் - எத்தனை கி.மீ. வேகத்துக்கு காற்று வீசும்?
Published on

சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் காரைக்காலில் இருந்து 240 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக இன்றிரவு கரையைக் கடக்கிறது. மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு தென் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.

இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். நாளை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நெருங்கி வருவதால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஆறாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர் மற்றும்நாகப்பட்டினம் துறைமுகங்களில் நான்காம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com