சென்னையில் மணியம்மை சிலைக்கு சேலையை போர்த்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அவமரியாதை செய்ததாக திராவிடர் கழகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மை சிலைக்கு இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சேலை போர்த்தி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர், சிலைக்கு போர்த்தியிருந்த சேலையையும் அகற்றினர்.
இதையடுத்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் கொடுத்தார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். திராவிடர் தலைமை கழகம் அருகே உள்ள சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கும்படியும் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது, எழும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அவமரியாதை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று உள்ளார் என்றும், காவி வேட்டி அணியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர் இங்கிருந்தவர் இல்லையென்றும், அவரை கைது செய்தால்தான் உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவரா அல்லது உள் நோக்கதுடன் அவமரியாதை செய்துள்ளாரா என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணியம்மை சிலைக்கு காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.