தாய்ப்பாசத்தில் 2300 கி.மீ பைக்கிலேயே தமிழகம் திரும்பி பொறியாளர்..!

தாய்ப்பாசத்தில் 2300 கி.மீ பைக்கிலேயே தமிழகம் திரும்பி பொறியாளர்..!
தாய்ப்பாசத்தில் 2300 கி.மீ பைக்கிலேயே தமிழகம் திரும்பி பொறியாளர்..!
Published on

ஊரடங்கால் குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் சிக்கிய பொறியாளர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது தாய் மற்றும் மனைவி, மகன்களை பார்ப்பதற்காக 2,300 கிலோமீட்டர் பைக்கிலேயே தமிழகம் திரும்பியுள்ளார்.

குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் சந்திரமோகன். இவரது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் வசிக்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்ப முடியாத காரணத்தால், சுமார் ஒரு மாத காலம் குஜராத்திலேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள சந்திரமோகனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அது குறித்த தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்திரமோகன், அங்குள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனம் மூலம் தமிழ்நாடு செல்ல விண்ணப்பித்துள்ளார். அந்த மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க கடந்த 22ம் தேதி காலை பைக்கிலேயே அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக சுமார் 2,100 கிலோமீட்டர் பயணித்து கரூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார் சந்திரமோகன்.  செய்தியாளர்களிடம் பேசுகையில்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குஜாராத்திலேயே ஒரு மாத காலம் தங்கியிருந்தேன் தொண்டு நிறுவனங்கள் இருவேளை அளித்த உணவு சாப்பிட்டு இருந்தேன். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், பைக்கிலேயே புறப்பட்டு வந்துவிட்டேன். வழி நெடுக காடுகள் நிறைந்த சாலை என்பதால் பகலில் மட்டுமே வண்டியே ஒட்டினேன். இரவில் ஏதாவது ஒரு பெட்ரோல் பங்கில் தங்கி வந்து சேர்ந்தேன்.

குஜாராத்திலிருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா எங்கும் உணவு கிடைக்கவில்லை. 22ம் தேதி புறப்பட்டு இன்று 3 வது நாளா இன்றுதான் தமிழகத்துக்குள் நுழைந்தேன். தமிழகத்துக்குள் வந்த பிறகுதான் சாப்பாடு கிடைத்தது. அதுவரை பிஸ்கட் தண்ணீர்தான் உணவு” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com