போலீஸ் எனக் கூறிக்கொண்டு பணத்தை அபேஸ் செய்தவர் கைது..!

போலீஸ் எனக் கூறிக்கொண்டு பணத்தை அபேஸ் செய்தவர் கைது..!
போலீஸ் எனக் கூறிக்கொண்டு பணத்தை அபேஸ் செய்தவர் கைது..!
Published on

சென்னை கே.கே.நகரில் போலீஸ் எனக் கூறிக்கொண்டு முதியவரிடம் பணத்தை அபேஸ் செய்த திருடன் கைது செய்யப்பட்டார்.

விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் (67). இவர் கடந்த 1-ம் தேதியன்று கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றபோது, ஒரு நபர் போலீஸ் என தன்னைக் கூறிக்கொண்டு குப்பானந்தனிடம் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் அந்த பகுதியில் ஏற்கெனவே திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால் பணத்தில் உள்ள ரூபாய் நோட்டில் எண்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரிபாக்க வேண்டும் எனவும் குப்பானந்தாவிடம் இருந்து அந்த நபர் பணத்தை வாங்கியுள்ளார். மேலும் 4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பிடுங்கியுள்ளார். ரூபாய் நோட்டு எண்களை சரிபார்த்து விட்டு திரும்பி வருகிறேன் என்று சொன்ன நபர் பின்னர் மீண்டும் வரவில்லை. இதுதொடர்பாக குப்பானந்தன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

(பாதிக்கப்பட்ட முதியவர் குப்பானந்தன்)

இதனையடுத்து, போலீசார் அங்கு பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் பழைய குற்றவாளியான மகஷ் என்கிற மகேந்திரன் என்பது தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

மாதத்தின் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு பென்சன் பணத்தை எடுத்து செல்ல வரும் வயதான முதியவர்கள்தான் மகேஷின் டார்கெட். தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்று மிரட்டிப் பணம் பறித்து விட்டு தப்பிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் மகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com