“பாஜகவில் இணைந்தது ஏன்?” - மக்கள் நீதி மய்யம் முன்னாள் நிர்வாகி அருணாச்சலம் விளக்கம்

“பாஜகவில் இணைந்தது ஏன்?” - மக்கள் நீதி மய்யம் முன்னாள் நிர்வாகி அருணாச்சலம் விளக்கம்
“பாஜகவில் இணைந்தது ஏன்?” - மக்கள் நீதி மய்யம் முன்னாள் நிர்வாகி அருணாச்சலம் விளக்கம்
Published on

விவசாயிகளின் நலன் கருதியே பாஜகவில் இணைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தில் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதலே அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார் அருணாச்சலம்.

பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாசலம், “தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு விவசாயியாக இது பயனுள்ள திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை கூட்டத்தில் தெரிவித்தேன். விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்காமல், கட்சியின் அடிப்படையில் முடிவு எடுத்தார்கள். திமுகவில் உள்ளது போல் நிலைப்பாடு எடுக்கிறார்கள். அப்படியெனில் எப்படி கட்சி மையமாக இருக்கும். பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com