'இல்லையா சார் ஒரு ENDu' கட்சி மாறி - மாறி - மாறி மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான மைத்ரேயன்

‘இதுக்கு இல்லையா சார் எண்டு’ என ஆதங்கப்படுகிறார்கள்., அடிக்கடி மைத்ரேயனின் படத்தை அவர் இருக்கும் கட்சியை மறந்து, தவறாகப் பயன்படுத்தி ஊடக அலுவலகங்களில் பாஸ்களிடம் திட்டு வாங்கும் சோஷியல் மீடியா டீம் ஊழியர்கள்.
எடப்பாடி பழனிசாமியுடன் மைத்ரேயன்
எடப்பாடி பழனிசாமியுடன் மைத்ரேயன்pt web
Published on

மைத்ரேயன் அரசியல் பயணம்

பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன் மீண்டும் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருக்கிறார்.., ஆர்.எஸ்.எஸ், பாஜக, அதிமுக, அதிமுகவில் ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணி, மீண்டும் பாஜக, தற்போது அதிமுக என, ``பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு’’ என்கிற ரீதியில் நம்மைக் கன்பியூஸ் செய்கிறார் அரசியல் தலைவர் மைத்ரேயன். அடிப்படையில் மருத்துவரான மைத்ரேயனின் அரசியல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

சுதந்திரப் போராட்ட வீரரான கே. ஆர். வாசுதேவன் மற்றும் அவரது மனைவி மங்கா வாசுதேவன் தம்பதிக்கு மகனாக, நவம்பர் 21, 1955 இல் சென்னையில் பிறந்தவர் மைத்ரேயன். பள்ளிப்படிப்பை சென்னையிலும் மருத்துவப் படிப்பை நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்தார். மீண்டும் சென்னை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவத்துக்கான சிறப்புப் படிப்புகளை முடித்தவர், சிறிது காலம் புற்றுநோய் சிகிச்சை மருத்துவராகவும் பணியாற்றினார். கல்லூரிக் காலங்களிலேயே, ஆர்.எஸ்.எஸ் சிந்தாத்தின் மீது ஈர்ப்பு உண்டாகி பின்னர் அந்த அமைப்பில் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து, 1991-ல் அதன் அரசியல் பிரிவான பாஜகவில் இணைந்தார். செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன்,. 1995 முதல் 1997 வரை பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை மாநிலத் துணைத் தலைவராகவும், 1999-ல் சில காலம் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு ஜூலையில் பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் மைத்ரேயன்
“சீனிவாசன் அண்ணனின் தனிப்பட்ட வீடியோ வெளியானதற்கு பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன்” - அண்ணாமலை

பாஜகவில் இருந்து மீண்டும் அதிமுக

2002-ம் ஆண்டு அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக மைத்ரேயன் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.., தொடர்ந்து, 2007, 2013 -ல் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வானார்.., அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கினார் மைத்ரேயன். அதிமுகவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்த அவருக்கு ஆதரவாக நின்றார் மைத்ரேயன். ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இரண்டு அணிகளும் ஒன்றான பிறகு, மைத்ரேயனுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை.

கடந்த, 2022-ம் ஆண்டு அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு வழங்கினார் மைத்ரேயன். தொடர்ந்து, எடப்பாடி தரப்பில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கருதியவர், மீண்டும் ஓ.பி.எஸைச் சந்திக்க கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து ஒதுங்கியே இருந்தவர், கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. “அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவேன்” எனக் கூறிய மைத்ரேயன், தற்போது அண்ணாமலை லண்டனுக்குப் படிக்கச் சென்றதால் என்னவோ மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியுடன் மைத்ரேயன்
சென்னை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து: மின்வாரியம் விளக்கம்!

கன்ஃபியூஸ் ஆகும் சோசியல் மீடியா டீம் 

“அதிமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் சேரலாம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் வழங்க வேண்டும்” என கடந்தாண்டு ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு சமீபத்தில்தான் மைத்ரேயன் கண்ணில் பட்டதோ என்னவோ, தான் மீண்டும் அதிமுகவில் இணைய விரும்புவதாக கூறி கடிதம் அளித்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, நேற்று மைத்ரேயனை தனது வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்ததோடு, அவரை கட்சியிலும் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில், ‘இதுக்கு இல்லையா சார் எண்டு’ என ஆதங்கப்படுகிறார்கள்., அடிக்கடி மைத்ரேயனின் படத்தை அவர் இருக்கும் கட்சியை மறந்து, தவறாகப் பயன்படுத்தி ஊடக அலுவலகங்களில் பாஸ்களிடம் திட்டு வாங்கும் சோஷியல் மீடியா டீம் ஊழியர்கள்.

எடப்பாடி பழனிசாமியுடன் மைத்ரேயன்
இந்தியாவின் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால்.. ஹரியானா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com