மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை

மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை
மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக,  மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது. 

மதுராந்தகம் ஏரியின் முழுகொள்ளளவான 23. 3 அடியில் தற்போது முழுவதுமாக நிரம்பியுள்‌ளது. அதன்காரணமாக, கிளியாற்றில் 100 கன ‌அடி நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதுதவிர 5 கிளை ஏரிகளுக்கும் கால்வாய்கள் வழியாக நீர் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய அளவிற்கு மழை இல்லாத நிலையில், ஏரிக்கு 200 கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மட்டுமே தானாக இயங்கும் ஷட்டர்கள் திறந்து அதிகளவு தண்ணீர் வெளியேறும்.‌ தற்போது மழை இல்லாததாலும், கிளியாற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதாலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஏரிக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றம், கரைகளின் உறுதித் தன்மை உள்ளிட்டவற்றை கண்‌காணித்து வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com