ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்!!

ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்!!
ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்!!
Published on

ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய மதுரை கல்லூரி மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ஆயிரம் டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது.

 ஃபேஸ்புக் பக்கத்தில் தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வீடியோக்கள் ,செய்திகள். ஆடியோக்களை பதிவேற்றம் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கி வரும்.இந்நிலையில் இந்த தொகுப்புகளை பாதுகாப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனமானது ரைட்ஸ் மேனேஜர் (Rights Manager) என்ற ஒரு வசதியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இதில் உள்ள சில வசதிகள் மூலமாக தனியார் நிறுவனத்தின் தரவுகளை எளிதாக பார்த்து பயன்படுத்தி அதனை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தும் நிலை உள்ளதை மதுரை தவுட்டு சந்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிஷோர் கண்டுபிடித்தார். இந்த பாதுகாப்பு குறைப்பாட்டை மாணவர் கிஷோர் ஃபேஸ்புக்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.இதனையடுத்து மாணவரின் ஆலோசனையை கேட்டுக்கொண்டு ஒப்பதல் அளித்த ஃபேஸ்புக் நிறுவனம், அந்த குறைபாட்டை சரி செய்தது.

இதனைத்தொடர்ந்து தங்களது நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கிய மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்க மதிப்பில் ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை அனுப்பி வைத்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 77 ஆயிரம் ரூபாய் ஆகும்.ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய மதுரை கல்லூரி மாணவருக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com