”வெற்றிபெறணுமா? ரூ.10 ஆயிரம் கொடுங்க”-வேட்பாளர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்! ஷாக் தகவல்

”வெற்றிபெறணுமா? ரூ.10 ஆயிரம் கொடுங்க”-வேட்பாளர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்! ஷாக் தகவல்
”வெற்றிபெறணுமா? ரூ.10 ஆயிரம் கொடுங்க”-வேட்பாளர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்! ஷாக் தகவல்
Published on

மதுரையில் வேட்பாளர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் கும்பல். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வார்டில் உள்ள வாக்காளர்கள் அனைவருடைய கைப்பேசி எண்களை தருவதாக பேசி மோசடியில் ஈடுபட முயற்சி.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரதான கட்சிகள் தொடங்கி சுயேட்சைகள் வரை வேட்புமனுத் தாக்கல் செய்துவருவதோடு தற்போதில் இருந்தே வாக்காளர்களை கவரும் வகையில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்கள் எளிதாக வெற்றிபெற வழிவகை கூறுவதாகக் கூறி ஒருசிலர் வேட்பாளர்களுக்கே ஆசைகாட்டி நூதன மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்ற வேட்பாளரை, இந்தியன் எலெக்சன் மேனஜ்மெண்ட் சென்னை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய பெண், முதலில் வெற்றிபெற வாழ்த்துகள் எனக்கூறி வேட்பாளரை வார்த்தையால் மனம் குளிர வைத்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அந்தப் பெண். நீங்கள் வெற்றி பெறுவதற்கான வழிவகை செய்து தருவதாக கூறுகிறார். வேட்பாளரோ என்ன ஐடியா என ஆர்வத்துடம் கேட்க எங்களிடம் நீங்கள் போட்டியிடக் கூடிய வார்டில் உள்ள வாக்காளர்களின் 90 சதவிதம் பேருடைய செல்போன் தொடர்பு எண்கள் இருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் அவர்களை எளிதில் தொடர்பு கொண்டு போனில் பேசியும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாக பிரச்சாரம் செய்து எளிதாக வெற்றிபெறலாம் எனவும் கூறுகிறார்.

அதோடு வேட்பாளர்கள் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்காக பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் செல்போனில் வாக்காளர்களிடம் பேசுவது போல நீங்களும் உங்கள் வார்டு வாக்களர்களிடமும் உங்களது ஆடியோவை அனுப்பி ஓட்டு கேட்கலாம் எனவும், கொரோனா காலகட்டம் என்பதால் வாக்கு சேகரிக்க எளிமையான வழி எனவும் ஆசை வார்த்தை கூறுகிறார்.

இதையடுத்து வாக்காளர்களின் செல்போன் எண்கள் தேவை எனில் எங்களது அக்கவுண்டில் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் உங்களுக்கு செல்போன் நம்பர்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும், முதலில் ஓகே சொன்னால் ஐடியில் மாதிரி வாக்காளர் பட்டியலில் செல்போன் எண்ணிற்கு பதிலாக ஓஓஓ என இருக்கும் எனவும் 10 ஆயிரம் வந்தவுடன் செல்போன் எண் கிடைக்கும் எனவும் கூறுகிறார். ஆனால் எதிர்தரப்பில் பேசும் வேட்பாளர் 50 எண்களை மாதிரி எண்ணாக அனுப்புங்கள் என கூறியபோது ஏதேதோ பேசி மழுப்பிய அந்தப் பெண் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதேபோல் எலெக்சன் கமிஷன் டேட்டா மேனேஜ்மென்ட்டில் இருந்து பேசுவதாக மதுரை மாநகராட்சியில் 67 வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தினேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசிய மற்றொரு பெண் மோசடியில் ஈடுபடும் ஆடியோ தற்பொழுது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடைய செல்போன் எண்கள் இந்த மோசடி கும்பலுக்கு எவ்வாறு கிடைக்கிறது அந்த மோசடி கும்பல்களுக்கு வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் தொலைபேசி எண் எவ்வாறு கிடைக்கிறது என்பது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி உள்ள நிலையில், இதுபோன்ற மோசடி கும்பல்களின் தவறான செயல்களை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நுகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை குறிவைத்து இது போன்ற மோசடி கும்பல்கள் களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com