மதுரை: 1330 குறள்களால் திருவள்ளுவர் படத்தை எழுத்து ஒவியமாக வரைந்து அசத்திய இளைஞர்

மதுரை: 1330 குறள்களால் திருவள்ளுவர் படத்தை எழுத்து ஒவியமாக வரைந்து அசத்திய இளைஞர்
மதுரை: 1330 குறள்களால் திருவள்ளுவர் படத்தை எழுத்து ஒவியமாக வரைந்து அசத்திய இளைஞர்
Published on

மதுரையில் 1330 குறள்களால் பிரம்மாண்ட திருவள்ளுவரை எழுத்து ஓவியம் (லெட்டர் டிராயிங்) மூலம் வரைந்து அசத்தியுள்ள இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் - பிரியா தம்பதியினரின் மகன் சந்துரு (23). பி.காம் சிஏ படித்துள்ள சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் திறமை உள்ளவரான இவர், பென்சில் டிராயிங், ஆயில் பெயிண்டிங், லெட்டர் டிராயிங் உள்ளிட்ட ஓவியங்களை வரைவதில் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில், கடந்த 9 நாட்களாக தொடர்ந்து 1330 குறள்களைக் கொண்டு எழுத்து ஓவியம் எனப்படும் லெட்டர் டிராயிங் முறையில் திருவள்ளுவர் படத்தை வரைந்து பல தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.

திருவள்ளுவர் அமர்ந்த நிலையில் இடது கையில் ஓலையில் அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறளை தொடங்கி ஓவியத்தை வரைந்துள்ள சந்துரு, இதுபோன்று தேசத்தலைவர்களின் பல ஓவியங்களையும் வரைந்துள்ளதாக கூறினார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com