மாநகராட்சி வாகனத்தில் பிடித்துச் செல்லப்பட்டசென்ற குதிரை குட்டியை அதன் தாய்க்குதிரை பின் தொடர்ந்து ஓடிய நெகிழ்ச்சியான சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாநகரின் பல்வேறு சாலைப் பகுதிகளில் மாடுகள், குதிரைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், மதுரை வைகை தென்கரை பகுதி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித் திரிந்த குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் குதிரை குட்டி ஒன்றை பிடித்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
அப்போது, தனது குட்டியை பிரிய மனமில்லாத தாய்க்குதிரை, மாநகராட்சி வாகனத்தை மறித்து நின்றதோடு, வாகனத்தில் ஏற மறுத்து வாகனத்தின் பின்னாலேயே ஓடிச்சென்ற காட்சி காண்போரை நெகிழச் செய்தது.

இதுவல்லவா தாய்ப்பாசம்!#Madurai | #Horse | #MaduraiCorporation pic.twitter.com/Ak7mvr0rYm
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 21, 2022