மதுரை | மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள் - போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி முதியவர்!

மதுரை திருநகரில் மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளின் வாகனம் முன்பு உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
நூதன போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்
நூதன போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்pt desk
Published on

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தினமும் வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். இந்த விபத்தில் சில வாகன ஓட்டிகளின் உயிர் பிரிவதும்கூட நிகழ்ந்துள்ளது. சிலருக்கு கை கால்கள் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றும் அவலமும் இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டுமென அந்தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள்
மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள்pt desk

இந்த நிலையில், மதுரை திருநகரில் பகுதி சாலைகளில் 7க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதாகவும் இதனால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து இன்று மதுரை மாநகராட்சியின் சார்பாக மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வந்தனர். அப்போது மாடுகளை பிடிக்கக் கூடாது என்று திருநகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்தையா என்பவர், மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனம் முன்பு உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்
மதுரை: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் - நீர்வளத்துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம்!

இதனால் மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள் செய்வதறியாது நின்றனர். மாற்றுத்திறனாளி முதியவரின் நூதன போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com