இலங்கை அகதி மாணவருக்கு கத்திக் குத்து: இரு மாணவர்கள் கைது

இலங்கை அகதி மாணவருக்கு கத்திக் குத்து: இரு மாணவர்கள் கைது
இலங்கை அகதி மாணவருக்கு கத்திக் குத்து: இரு மாணவர்கள் கைது
Published on

மதுரையில் இலங்கை அகதி மாணவரை கத்தியால் குத்திய இரண்டு சக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அர்ஜூன் என்ற மாணவன் படித்துவருகிறார்.

இவர் உறவினர் ஜெயலட்சுமி என்பவர் வீட்டில் தங்கி +2 படித்து வந்த நிலையில், அதே பள்ளியில் +2 படிக்கும் சுண்ணாம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவன் அர்ஜூன் அரசுப் பொது தேர்வுக்காக பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, அங்கே வந்த மாணவர் கார்த்திக் ராஜா மற்றும் அவரது நண்பன் சரவணன் ஆகியோர் அர்ஜூனிடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவர் ஆர்ஜூனின் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார். இதில் மாணவர் அர்ஜுனுக்கு இடது கையின் இரண்டு விரல்கள் துண்டானது. ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக மாணவர் அர்ஜூன் மதுரை இராஜாஜி அரசுப் பொது மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மேலூர் காவல்துறையினர், மாணவர்கள் கார்த்திக் ராஜா மற்றும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மீதும், 341, 307 மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com