2020ல் அடிக்கல்;2021ல் கட்டுமானப் பணி..குஜராத்தில் வேகமெடுக்கும் எய்ம்ஸ்..ஆனால் மதுரையில்?

2020ல் அடிக்கல்;2021ல் கட்டுமானப் பணி..குஜராத்தில் வேகமெடுக்கும் எய்ம்ஸ்..ஆனால் மதுரையில்?
2020ல் அடிக்கல்;2021ல் கட்டுமானப் பணி..குஜராத்தில் வேகமெடுக்கும் எய்ம்ஸ்..ஆனால் மதுரையில்?
Published on

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டட பணிகள் துவங்கியுள்ள நிலையில், மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா. இவர், இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தில் நிதி கோரப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் மூலம் கடன் கோரப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நேரடியாக மத்திய அரசிடம் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை, நிதி ஒதுக்கீடு, பணிகளின் சதவீதம் குறித்த கேள்விக்கு...

மதுரை எய்ம்ஸ்க்கு 1264 கோடிக்கு மட்டும்தான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 736 கோடிக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்ற தகவல் வழங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை 12.35 கோடி ரூபாய் மட்டுமே நிதி வழங்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டிசம்பர் 31, 2020-இல் அடிக்கல் நாட்டிய பின் ஒரே மாதத்தில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் இன்னும் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையே நீடிப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com