மதுரையில் லஞ்சம் வாங்கி கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் ஐந்து பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக அங்குள்ள ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒலினா , அலுவலக உதவியாளர் கணேசன் , ஹரிஹரன் உட்பட ஐந்து ஊழியர்களை தற்கலிகபணி இடைநீக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் உத்தரவிட்டுள்ளார் .
இது மட்டுமல்லாமல் 12 ஊழியர்களை பணி இடமாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகின்றது .