பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியரைக் கொன்றவர்கள் திண்டுக்கல்லில் சரண்

பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியரைக் கொன்றவர்கள் திண்டுக்கல்லில் சரண்
பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியரைக் கொன்றவர்கள் திண்டுக்கல்லில் சரண்
Published on

மதுரையில் ரேசன் கடை ஊழியரை பட்டப்பகலில் கொன்றவர்கள் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மதுரை வாழைத்தோப்பு பகுதியில் பள்ளிவாசல் எதிரே ஸ்ரீ மீனாட்சி பண்டக சாலை என்னும் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை காமராஜர்புரம் பகவத்சிங் தெருவைச் சேர்ந்த குமரேசன் மகன் முனியசாமி என்பவர் பகுதி நேர ரேசன் கடை ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 8 மணியளவில் ரேசன் கடையை திறந்த முனிசாமி ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவசர அவசரமாக ரேசன் கடை வாசலில் வண்டியை நிறுத்தி ரேசன் கடைக்குள் புகுந்தனர்.

பின்னர் அங்கு பணியிலிருந்த முனிசேகரை அந்த 5 பேர் கொண்டு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பினர். இதனால் அங்கிருந்தவர்கள் பதட்டத்தில் அலறினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர காவல்துறையினர், முனிசேரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொல்லப்பட்ட முனுசாமிக்கு சுமதி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகள் மற்றும் 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முனிசேகரை கொலை செய்த குற்றத்திற்காக கண்ணன், சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் நவீன் ஆகிய 3 பேர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் மதுரை கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள். ஏன் கொலை செய்தார்கள்? என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கசிந்த தகவல்களில், முனிசேகரன் டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பதால் சில அரசியல் காரணங்களுக்காக கொலை செய்திருக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com