தமிழ்நாடு
மதுரை: ‘பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்...’- மழலையர் பள்ளி செய்த அசத்தல் முயற்சி! #Video
மதுரையில் தனியார் மழலையர் பள்ளியொன்றில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அப்போது குழந்தைகளை பல்லக்கில் அமர வைத்து இளவரசர், இளவரசி போல் பள்ளிக்குள் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் தனியார் மழலையர் பள்ளி கல்விக் குழுமமொன்றில், 2023 - 24 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இதில் சேர வரும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், அவர்களை பல்லக்கில் அமர வைத்து பெற்றோர் உதவியுடன் தூக்கி வர ஏற்பாடு செய்துள்ளது குழுமம்.
குழந்தைகளை இளவரசர் இளவரசிகளாக பாவித்து அழைத்து வந்து, தமிழன்னையை தமிழ் எழுத்துக்களால் ஆராதித்து, பின் அரிசியில் தாய்மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’வை எழுத பயிற்றுவித்துள்ளனர் ஆசிரியர்கள். குழந்தைகளை பல்லக்கில் அமர வைத்து பெற்றோர் தூக்கி வந்தபொழுது, ‘ராஜாதி ராஜா ராஜ கம்பீரர் பராக் பராக்’ என்று ஆசிரியர்கள் சொன்னதால், பெற்றோர்களும் உற்சாகமடைந்தனர்.