இறப்பு பதிவு நாட்களை அதிகப்படுத்த முதல்வருக்கு மதுரை எம்.பி வெங்கடேசன் கோரிக்கை

இறப்பு பதிவு நாட்களை அதிகப்படுத்த முதல்வருக்கு மதுரை எம்.பி வெங்கடேசன் கோரிக்கை
இறப்பு பதிவு நாட்களை அதிகப்படுத்த முதல்வருக்கு மதுரை எம்.பி வெங்கடேசன் கோரிக்கை
Published on

இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் பழைய விதியை இந்த காலத்தில் முதல்வர் தலையிட்டு திருத்த வேண்டும் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ட்விட்டர் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் இறப்புகள் அதிகரித்திருக்கிறது. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்குகிறது. இறந்தவர்களை பதிய, வாழ்கிறவர்கள் படாதபாடு படுகிறார்கள். மேலும் அபராதத் தொகையை விட கொடியதாக மண்டல அலுவலகத்துக்கும் வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல் உள்ளது.

இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் பழைய விதியை இந்த காலத்தில் முதல்வர் அவர்கள் தலையிட்டு திருத்த வேண்டும்.

எளிய மக்களின் இடரைக் குறைக்க இது மேலும் உதவும். @CMOTamilnadu @mkstalin
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 30, 2021

மரணங்களை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு மனிதர்கள் தேங்கிக்கிடக்கிறார்கள். இறப்பு சான்றிதழுக்காக அழுதகண்ணீரோடு அலையவிட வேண்டாம் என அரசை கேட்டுக்கொள்கிறேன். எளிய மக்களின் இடரை குறைக்க இது மேலும் உதவும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com