மதுரை| 1997-ல் ரூ.60 வழிப்பறி செய்து தலைமறைவான நபர்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது! எப்படி சிக்கினார்?

27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி செய்து தலைமறைவான நபரை மதுரை காவல்துறையினர் தற்போது கைது செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருட்டு
திருட்டுPT
Published on

மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 55. இவர் 1997ல் ரூ.60 வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவானார். அவர் மீது பிடிவாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.

திருட்டு
திருட்டு

இந்நிலையில், பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தற்போது சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. உதவிகமிஷனர் சூரக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சந்தானபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பழைய வழக்குகளை ஆய்வு செய்துவந்த நிலையில், 1997-ல் ரூ.60 வழிப்பறி செய்த வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பன்னீர் செல்வம் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

திருட்டு
'எதற்கும் ஒரு எல்லை வேண்டும்..' CSK-ஐ விமர்சித்த ராபின் உத்தப்பா! முன்னாள் வீரர் எதிர் விமர்சனம்!

27 ஆண்டுகளுக்கு பின் எப்படி கைதானார்?

ஜக்காதோப்புக்கு சென்று பன்னீர்செல்வம் குறித்து விசாரித்த போலீஸாருக்கு, அவர் சிவகாசி பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரிந்தது. அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் தெப்பக்குளம் போலீசாருடன் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு காவல்துறையின் உறுதிசெய்தனர்.

இதைதொடர்ந்து 1997-ல் ரூ.60 திருடிய வழக்கில் தப்பிச்சென்று தற்போது ஒயின் ஷாப்பில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர். 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

திருட்டு
தென்காசி: தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பல் கைது - போலீசார் விசாரணை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com