நித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து

நித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து
நித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து
Published on

மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததற்கு விதித்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. 

2012 ஆம் ஆண்டு 293-ஆவது மதுரை ஆதீன‌மாக நித்யானந்தா அறிவித்துக்கொண்‌‌டதை எதிர்த்து மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா நியமனத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நித்யானந்தா சீராய்வு மனு தக்கல் செய்தார். 

நித்யானந்தா மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரது நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ரத்து செய்துள்ளது. “நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடர அறநிலையத்துறையிடம் அனுமதிபெற வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தவர்கள் அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல”   என்ற நீதிபதி முரளிதரன் தெரிவித்தனர்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com