போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திருப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில்குமரைய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் எனவும் அவ்வாறு பணிக்கு திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, அரசு போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள நீதிமன்றம், உடனடியாக தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லையென்றால் எஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் யாராவது பேருந்து ஓடுவதை தடுக்க முயன்றால், அவர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.