''ஓட்டுக்கு பேரம் பேசி பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர்'' - நீதிபதிகள் வேதனை

''ஓட்டுக்கு பேரம் பேசி பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர்'' - நீதிபதிகள் வேதனை
''ஓட்டுக்கு பேரம் பேசி பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர்'' - நீதிபதிகள் வேதனை
Published on

அரசியல்வாதிகளிடம் வாக்காளர்களே பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, தேர்தலின்போது ஒவ்வொரு தொகுதிகளிலும் அரசியல்வாதிகள் ரூ.50 கோடி முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாக பணம் செலவு செய்கின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர். வருமான வரித்துறைக்கு தெரிந்தே தேர்தலின்போது கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

பணம் கொடுக்க முன் வரும் அரசியல் கட்சிகளிடம் வாக்காளர்களே பேரம் பேசி ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அடிப்படை முறையே சரியில்லை என்றும் மாற்றம் ஒவ்வொருவரிடம் இருந்து தொடங்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com