தென்காசியைச் சேர்ந்த அமிர்தலால் என்பவர், கொரோனா காலத்தில் தனது மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினர் சோதனை நடத்தி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும், ஆனால் தனது மருத்துவமனை தூய்மையாகத்தான் இருந்தது என்றும் கூறி தொகையை திருப்பித் தர வலியுறுத்தினார்.
இது தொடர்பான விசாரணையின்போது, மருத்துவமனை தூய்மையாக இருந்ததற்கான ஆவணங்களை சமர்பிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி முரளிசங்கர் மனுவை தள்ளுபடி செய்தார்.
அதேசமயம், “மனுதாரர், எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ பட்டயபடிப்பு சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். ஆனால், இதனை வைத்து மருத்துவம் பார்க்கமுடியாது. இதுபோன்ற பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து, பொதுமக்கள் உயிருடன் சிலர் விளையாடுகின்றனர். மனுதாரரின் மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்யவும், அதில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்” என்று உத்தரவிட்டார்.