சத்யராஜ், சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 நடிகர்கள் பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகைத்துறையினர் தொடர்பாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், விவேக், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட 8 பேர் சில கருத்துகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக 8 பேர் மீதும் நீலகிரியை சேர்ந்த பத்திதிகையாளர் ரொசாரியோ மரிய சூசை என்பவர் நீலகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மே 15 ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் பேச்சுரிமை, கருத்துரிமை அடிப்படையில் நடிகர்கள் பேசுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதை நீதிபதி முரளிதரன் சுட்டிக்காட்டினார். அதன் அடிப்படையில் நடிகர்கள் மீதான நீலகிரி நீதிமன்ற அவதூறு வழக்கை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பத்திரிகை துறையினரை நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், விஜயகுமார், அருண் விஜய், இயக்குனர் சேரன் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா, ஆகியோர் பேசினர். இதுதொடர்பாக 8 பேர் மீதும் நீலகிரியை சேர்ந்த பத்திதிகையாளர் ரொசாரியோ மரிய சூசை என்பவர் நீலகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய எட்டு நடிகர்களையும் நேரில் ஆஜராகும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் நேரில் ஆஜராகாத காரணத்தால் எட்டு நடிகர்களுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து, மே 15 ஆம் தேதியன்று நீதிபதி செந்தில் குமார் ராஜவேல் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா இடைக்கால தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று 8 பேர் தொடர்ந்த வழக்கில், நீலகிரி நீதிமன்ற விசாரணைக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் கடந்த ஜூன் மாதம் இடைக்கால தடைவிதித்திருந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பேச்சுரிமை, கருத்துரிமை அடிப்படையில் நடிகர்கள் பேசுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக மதுரை கிளை ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால், அதனடிப்படையில் நடிகர்கர் மீதான நீலகிரி நீதிமன்ற அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.