மதுரை: எல்இடி பல்ப்-ஐ விழுங்கிய குழந்தைக்கு நுரையீரல் அகநோக்கி சிகிச்சை - அரசு மருத்துவர்கள் சாதனை

ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி பல்ப்-ஐ விழுங்கிய குழந்தையின் நுரையீரலில், அகநோக்கி சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக அகற்றிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
எல்இடி பல்ப்-பை விழுங்கிய குழந்தைக்கு  நுரையீரல் அகநோக்கி சிகிச்சை
எல்இடி பல்ப்-பை விழுங்கிய குழந்தைக்கு நுரையீரல் அகநோக்கி சிகிச்சைpt desk
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தை இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த மாதம் 28ம் தேதி அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததாலும் எக்ஸ்ரேயில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 1ம் தேதி குழந்தை அனுப்பி வைக்கப்பட்டார்.

LED Bulb
LED Bulbpt desk

இந்நிலையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு இடது நுரையீரல் மூச்சுக் குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளதாக ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு பிராங்கோஸ்கோப்பி (Broncoscopy) எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதும், அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது.

எல்இடி பல்ப்-பை விழுங்கிய குழந்தைக்கு  நுரையீரல் அகநோக்கி சிகிச்சை
சென்னை: இரு குழந்தை தொழிலாளர்கள் உட்பட கொத்தடிமைகளாக இருந்த 5 பேர் மீட்பு

ஆகவே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்தப் பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கியிருந்த அந்தப்பொருளை அகற்றினர்.

குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதி
குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதிpt desk

இதையடுத்து இரும்பு ஊசிபோன்று ஸ்கேன் பரிசோதனையில் தென்பட்ட பொருள் குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி பல்பு என உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்களை, அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் வெகுவாக பாராட்டினார்.

எல்இடி பல்ப்-பை விழுங்கிய குழந்தைக்கு  நுரையீரல் அகநோக்கி சிகிச்சை
மதுரை: பட்டாசு வெடித்த 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை - அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

“சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும் போது அவற்றை விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக் குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருள்களை விளையாட அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com