மதுரையில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதுரை தெப்பக்குளம் மற்றும் காமராஜர்புரம் பகுதியில் உள்ள உணவகங்களில் 15-க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 50 கிலோ சிக்கன், 5 கிலோ அழுகிய பழங்கள், 25 கிலோ காலாவதியான பரோட்டா, தடை செய்யப்பட்ட 9 கிலோ பிளாஸ்டிக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து 25 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.