“விதிமீறலை பார்த்ததும் ஆதாரத்துடன் பதிவிடுங்கள்”: மதுரை காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை

“விதிமீறலை பார்த்ததும் ஆதாரத்துடன் பதிவிடுங்கள்”: மதுரை காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை

“விதிமீறலை பார்த்ததும் ஆதாரத்துடன் பதிவிடுங்கள்”: மதுரை காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை
Published on

முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் குறித்து ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறையின் வாட்சப் மற்றும் முகநூலில் பதிவிடலாம் என மதுரை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், “பொதுமக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளில் வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் யாரேனும் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் உடனடியாக அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மதுரை மாநகர வாட்சப் குற்ற முறையீட்டு எண்ணிற்கோ (83000-21100) அல்லது Madurai City Police என்ற முகநூல் பக்கத்திலோ தாராளமாக பதிவிடலாம். முகக் கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பவர்கள் மீது காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com