“போராட்டம் வாபஸ்”-ஆட்சியர்; “நீதிமன்றத்தை நாடுவோம்; போராட்டம்தொடரும்”-மக்கள்! மதுரையில் நடப்பதுஎன்ன?

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் நிலத்தை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால், போராட்டம் நடைபெறும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் நடத்தும் மக்கள்
போராட்டம் நடத்தும் மக்கள்pt web
Published on

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடப்பு கிராம மக்கள் தங்களுக்கு மாநகராட்சி இடத்திற்குள் மூன்று சென்ட் இடம், வீடு உள்ளிட்ட மீள்குடி அமர்வு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றை நிறைவேற்றிய பின்பு நிலத்தை கையகப்படுத்தக் கோரி கடந்த நான்கு நாட்களாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம்!
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம்!

விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயனி, தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி, விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஜேசிபி வாகனங்களுடன் வருகை தந்த போது அவர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தும் மக்கள்
கார்னர் செய்யப்படும் சூர்யா? தனிமனித தாக்குதலின் பிடியில் கங்குவா.. சினிமா விமர்சகர் கோடங்கி கருத்து

போராட்டம் தற்காலிக வாபஸ்

இந்த நிலையில் இன்று விமான நிலைய விரிவாக்கத்திற்கு நலத்தை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவசர உதவிக்காக இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது. கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

போராட்டம் தற்காலிக வாபஸ்!
போராட்டம் தற்காலிக வாபஸ்!

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, நிலத்தை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாக புதிய தலைமுறையிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கிதா தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையிடம் மேலும் அவர் கூறியதாவது, “ஏற்கனவே சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒருவார காலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இருந்தபோதும் அந்த மக்கள் கூடுதல் இழப்பீடு கேட்கிறார்கள். இழப்பீடு கேட்பது தொடர்பாக மக்கள் எந்த ஒரு மனுவையும் எங்களிடம் கொடுக்கவில்லை. மனு அளிக்க நாங்கள் அறிவுறுத்தியும் மனு அளிக்க மறுக்கிறார்கள்.

போராட்டம் நடத்தும் மக்கள்
ஹைதராபாத் | முற்றுகையிட்ட காவல்துறை.. உள்பக்கம் தாழிட்டுக்கொண்ட கஸ்தூரி.. கைதின் போது நடந்தது என்ன?

போராட்டம் தொடரும்

நிலம் கையகப்படுத்தும்போது பணம் மட்டுமே கொடுக்க முடியும். மாற்று நிலம் கொடுக்க முடியாது. இருப்பினும் சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டம் காரணமாக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு கிராம புரத்தில் வீடுகள் அல்லது நிலங்கள் வழங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது மக்கள் வீடுகளை காலி செய்ய ஒருவார காலம் அவகாசம் கொடுத்துள்ளோம்” என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு வார கால அவகாசத்தில் நீதிமன்றம் நாட இருப்பதாகவும்., தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.. தற்போது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உணவு சமைக்கப்பட்டு பந்தல்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

போராட்டம் நடத்தும் மக்கள்
நேற்று பஸ் டிப்போ திறப்பு; இன்று கட்சிக்கு முழுக்கு| கைலாஷ் கெலோட் ராஜினாமாவால் டெல்லியில் பரபரப்பு

50% வேலை எங்களுக்கு வேண்டும்...

ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் இதுதொடர்பாக கூறுகையில், “வீடுகளை இடிக்கப்போகிறோம் என காலை 4 மணிக்கு ஆயிரம் போலீஸ் வருகிறார்கள். எங்களை சாகடித்துவிட்டு வீடுகளைபோய் இடித்துக்கொள்ளுங்கள் என நாங்கள் சொல்கிறோம். எங்களுக்கு ஏர்போர்டுக்குள்ளும் வேலை வேண்டும். நிலம் எங்கள் மக்கள் கொடுத்தது. 50% வேலை எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். சுத்தம் செய்யும் வேலையைக் கூட கொடுங்கள் நாங்கள் செய்கிறோம். வெளி ஆட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள்.

பெண்கள் வீடுகளுக்குள் இருந்துகொண்டு, வீடுகளை இடித்தால் நாங்கள் செத்துவிடுவோம் என்கிறார்கள். செத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என அதிகாரிகள் சொல்கிறார்கள்” என தெரிவித்தனர்.

அக்கிராம மாணவிகள் இதுதொடர்பாக கூறுகையில், “வீடுகளுக்கு மின்சாரத்தையும் துண்டித்து விட்டனர். எங்களுக்கு தேர்வுகள் நெருங்கும் நிலையில் நாங்கள் எப்படி படிப்போம். குடிக்க தண்ணீர் கூட இல்லை. பள்ளிக்கூடத்தில் இருப்பிடச் சான்று கேட்டால் நாங்கள் என்ன செய்வோம்” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com