தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. வாரத்தில் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. இதனால் கொரோனா பரவல் தடுக்கப்படும் என்பதற்கு எந்தவித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், அதற்குபிறகு அரசு பல்வேறு புதிய நிபந்தனைகள் மற்றும் அரசாணைகளை விதித்துள்ளதால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.